Wednesday, 26 March 2014

வாழ்க்கைப் பயணம்


      * வாழ்க்கையின் சிரமம் புரியாமல்
         துக்கத்தின் முகவரி தெரியாமல்
         வாழ்ந்தது மழலை பருவத்தில்...

      * புத்தக மூட்டை சுமையாய் ஆனது
         பள்ளிப் பருத்தில்...

      * கனவுகள் சுமந்து
         கவலைகள் தொலைப்பது
         கல்லூரி பருவத்தில்....
     
      * தேடல் மட்டுமே
          வாழ்க்கையானது இளமைப் பருவத்தில்...

      * பொருளை தேடி
         நிம்மதியை தொலைப்பது
         நடுத்தர பருவத்தில்....

      * மெய்பொருள் தேடி
         துறவறம் கொள்வது
         முதுமைப் பருவத்தில்...
     
   

No comments:

Post a Comment