”வெற்றி இலக்கை அடைய முனைப்பும், ஆர்வமும், மன உறுதியும் செறிவாக இருக்க வேண்டும்.
இலக்கை ஒரு தாளில் எழுதி செயல்படு.
உயிர்வாழ ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உன் இலக்கும் என்றிருந்தால் வெற்றி கிட்டும்”
- டேவிட் சூயிட்ச்
நாளைய இந்தியாவை உருவாக்கும் சக்தி யாரிடம் உள்ளது?
இளைஞர்களே உங்களிடம் தான்!
"100 இளைஞர்களைக் கொடுங்கள் புதிய சமதர்ம இந்தியாவை உருவாக்கித் தருகிறேன்”
-சுவாமி விவேகானந்தர்
ஆம் இளைஞர்களே! உங்களால் முடியாதது எதுவும் இல்லை, சின்னச் சின்ன தோல்விகள் தான் வெற்றிக்கான படிக்கட்டுகளாகும்.
நீங்கள் தோல்வியைக் கண்டு துவண்டு போனால் வெற்றி உங்களைக் கண்டு அரண்டு ஓடிவிடும். தோல்வியை எதிர்த்து துணிந்து நின்றால் வெற்றியானது பணிந்து உங்களை வணங்கும்.
காந்திஜி சத்திய சோதனையில் “வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற தோல்விகளை விட சிறந்த ஆசிரியர் வேறு யாருமே இருக்க முடியாது. அனுபவ பூர்வமாக உணர்ந்த நிலையில் இதை சொல்கிறேன். நான் பெற்ற கல்வியை விட நான் சந்தித்த தோல்விகளில் இருந்து தான் அதிகமாக கற்றுக் கொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வெற்றி பெற கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருத்தல் அவசியம். இவை இரண்டும் இருந்தால் வெற்றிகள் அனைத்தும் உங்கள் வசமே!